சொல் புதிது

சொற்கள்தான் நமக்கான உலகத்தை நிர்மானிக்கின்றன. நமக்கான அகராதியில் ஒரு புதிய சொல்லின் வரவும் சேர்க்கையும் பெரும் கிளர்ச்சி ஊட்டக்கூடியது.
ஆங்கிலம் ஒரு கடன்கார மொழி. அதற்கென அடிப்படையாய் சில நூறு சொற்கள்தாம் இருக்கும். மற்றவை எல்லாம் பிறமொழியில் இருந்து வந்து சேர்ந்தவை. இலத்தீன் மொழியில் இருந்து மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமான சொற்கள் ஆங்கிலத்திற்கு கிடைத்திருக்கிறது.

Fellatio என ஒரு புதிய ஆங்கிலச் சொல்லை சாலினியினுடைய ஒரு பதிவில் இருந்து நேற்றுத் தெரிந்துகொண்டேன். அதன் மூலத்தைத் தேடுகையில் இலத்தீனின் fellare எனத் தெரிந்தது.
Fellatio என்பதை oral stimulation of a men’s penis என மொழிபெயர்த்திருக்கிறார்கள். 1950களுக்குப் பிறகுதான் இந்தச் சொல்லின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது என்கிறார்கள்.

இது பற்றி தோழியிடம் பேசிக்கொண்டிருந்த போது, ‘இந்த word தெரியாமத்தான் sex பற்றி இவ்வளவு அளப்பறை பன்னி திரிகிறாயா?’ என மூஞ்சிலடித்தது போல கேட்டுவிட்டாள்.

அடியே இவளே, உனக்குச் சொல்ல எனக்கு இரண்டு விடயங்கள் இருக்கிறது;
1) இந்த சொல் என்னுடைய ‘அவசியம் தெரியவேண்டிய சொற்களின் பட்டியலில்’ இல்லை.
2) நான் sex பற்றி எந்த ஒரு அலப்பறையும் பன்னித் திரியவில்லை.
00

Cunt என்கிற ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் தெரிகிற போது நான் என் பதின்மத்தின் இறுதிநாட்களில் இருந்தேன். அதை நான் தெரிந்துகொள்ள முதலே, என்னுடைய நண்பன் என்னை திட்ட சுமார் மூன்றாண்டுகளாய் cunt எனும் சொல்லையே பிரயோகித்துக் கொண்டிருந்தான். அது அவனுக்குத் தெரிந்த நான்காவது ஆங்கில வார்த்தையாக இருந்தது.
Thank you
Sorry
I love you-(அவனளவில் இந்த வசனம் ஒரு தனிச் சொல்)
அடுத்தது cunt.

அர்த்தம் தெரியாததால் அவனை நான் பொருட்படுத்தவில்லை. அர்த்தம் தெரிந்த போது, அவனை மன்னிக்கும் பக்குவம் எனக்கிருந்தது.
00

போர்ஹேயினுடைய கதைகளில் நாங்கள் வியந்து நோக்குவது, அதனுடைய பொருளடக்கத்தையும் கட்டுமானத்தையும்தான். அவருடைய ஸ்பானிய வாசகர் போர்ஹேயினுடைய சொற்களைத்தான் ஆளமாக கவனிக்கிறார்கள். ஒருவிடயத்தை சொல்ல போர்ஹே தேர்வு செய்கிற சொற்கள் சிக்கனமானதும் இலகுவானதுமாக இருக்கிறது என்கிறார்கள். அதனால்தான் போர்ஹேயை நவீன ஸ்பானிய மொழியை கட்டமைத்தவர் என்கிறார்கள். அந்த pleasures மொழிபெயர்ப்பை வாசிக்கும் நமக்கு ஒருபோதும் கிடைக்கப்போவதில்லை.
00

சாலினியினுடைய பதிவுகள் வாசிப்பதற்கு ஒரு சிறுபறவையின் இறகைப் போல இலகுவாக இருக்கிறது. அந்தப் பதிவுகளின் கனம்தான் இறகின் மீது யானையை ஏற்றி வைத்தது போல இருக்கிறது. அவருடைய ‘மலரிலும் மெல்லிய’ பதிவை படித்துவிட்டு நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டேன். பலரும் அந்தப் பதிவின் கதைநாயகனுடன் தங்களை ஒப்பிட்டுக்கொள்கிறார்கள். என்னால் அதை இன்னமும் புரிந்துகொள்ள முடியவில்லை.
00

ஒரு மனநலமருத்துவராய் இருப்பதில் எவ்வளவு அகச்சிக்கல்கள் இருக்கும்! மற்றவர்களது சிக்கல்கள் எல்லாம் நமது தலைமீது ஏறிக்கொள்ளும். ஆரம்பத்தில் சுவாரஷ்யமாக இருந்தாலும் ஒரு கட்டத்துக்மேல் நம்மையே மனநோயாளி ஆக்க போதுமான விடயங்கள் மண்டைக்குள் ஏறிக்கொள்ளும். யாருடனும் அவற்றைப் பற்றிப் பேசவும் முடியாது. Client info protection அது. அபர்டீனில் இருந்த போது Lauren உடன் இது பற்றி நிறையப் பேசி இருக்கிறேன்.

Lauren அபர்டீன் University மனோதத்துவவியல் பிரவின் வருகைதரு ஆசிரியை. பிரிடிஸ் படை ஈரானில் நிலைகொண்டிருந்த போது அங்கு படைவீரர்களின் மனோதத்துவப் பிரச்சினைகளை கையாளும் குழுவில் இருந்தவள். அவள் பற்றி ஒரு கதை எழுதி இருக்கிறேன். அந்தக் கதைக்குத் தலைப்பு ‘சொல் அரசியல்’
00

நான் யாருடைய முகநூலையும் யாருக்கும் பரிந்துரைத்ததில்லை. ஆனால் இப்போது ஒரு சின்னப் பரிந்துரை;
நேரமிருப்பவர்கள் சாலினினுடைய முகநூல் பக்கத்தை ஒரு நோட்டமிடுங்கள். ஒரு மனநல மருத்துவரின் டயரிக்குறிப்புகள் போல இருக்கிறது அந்தப் பக்கங்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s