பதிவு செய்தல்

‘மார்வேஸின் கதைகளை இரண்டாவது முறை வாசிக்க முடியவில்லை. அதீத கற்பனையும் மீ-உண்மைகளாலும் மூச்சு முட்டி நிற்கிறது. முதல் முறை வாசிக்கும் போது கிடைக்கும் பரவசம் இரண்டாவது வாசிப்பில் தவறிப்போகிறது. உண்மைக்கு உண்மையாய் உயிரும் நனமும் சதையுமாய் கதைகள் வாசிக்கக்கிடைத்தால் நலம்’ எனத் தோன்றுகிறது என்று நண்பனிடம் சொன்னேன். மனதறியச் சொன்னதுதான் அது.

இருபதாம் நூற்றாண்டின் லத்தீன் அமேரிக்க இலக்கியத்தின் ஆதாரமாய் இருந்த hyper-reality உம் மெஜிகல் ரியாலிசமும் என்னுடைய உணர்திறனில் நீண்ட ஓட்டத்தில் தங்கிப்போகுதில்லை. (போர்ஹேயினுடைய படைப்புக்கள் மட்டும் ஏதோ ஒரு இடத்தில் விதிவிலக்கானவை)
00

1986 தொடங்கி, 2000ம் ஆண்டு வரை தமிழில் வெளியான லத்தீன் அமேரிக்கச் சிறுகதைகள் அடங்கிய தொகுப்புகளின் எண்ணிக்கை ஆச்சரியமளிக்கிறது. கோட்பாட்டு அடைசலுக்குள் தமிழ் இலக்கிய உலகம் எவ்வளவு சிக்குண்டு கிடந்திருக்கிறது என்பதை உணர முடிகிறது.

தமிழின் முன்னனி எழுத்தாளர்களும் அந்தச் சிக்கல்களுக்குள் முக்கி எழுந்துதான் வந்திருக்கின்றனர். எஸ்ரா, தன்னுடைய ஆரம்ப காலத்தில் அந்த மாதிரியான கதைக்களைக் கொண்ட தனித்தொகுப்பே போட்டிருக்கிறார். அவரே அவருடைய சைக்கிள் கமலத்தின் தங்கை தொகுப்பின் வெளியீட்டில் அந்த மாதிரியான கதைகளின் மீதான அவரது அலுப்பை, நம்பிக்கை இழப்பைப் பதிவுசெய்திருக்கிறார்.
00

இலக்கியத்தின் மெய்யான பணி ‘பதிவு செய்தல்’ என்று தான் சொன்னதையும் நண்பன் ஏற்றுக்கொள்ளவில்லை. போலவே இலக்கியத்திற்கு என்று பிரத்தியேகமான நோக்கம் என்றொன்று இல்லை என்கிறாள் உமையாழ். எல்லாக் கலை இலக்கியமும் மக்களை மகிழ்விக்கவே தோற்றம் பெற்றன, அதைத்தாண்டி எதுவும் இருந்ததில்லை என்பது அவளது வாதம். மொத்தமாக உடன்படமுடியாது என்றாலும், தனிநபர் அபிலாசைகளும் கலை இலக்கியமும் என்று சார்த்தர் எழுதிய கட்டுரையும் ஞாபகம் வந்தும், நான் அவளை மறுத்துரைக்கவில்லை.
00

1994யில் தமிழில் வெளியான ‘மற்ற மரணம்’ எனும் லத்தீன் அமேரிக்கச் சிறுகதைகளின் தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கிறேன். பிரேசிலின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான ஜோர்ஜ் அமாடோ எழுதிய ‘ பறவைகள் நிகழ்த்திய சாகாசம்’ எனும் கதையை இந்த ரயில் பயணத்தில் வாசித்து முடித்தேன். லக்ஷ்மி படத்தைப் பார்த்து பரவசமடைந்து விவாதித்து, முட்டிமோதி அலைக் கழிந்த முகநூல் போராளிகளும், இலக்கியவாதிகளை புனிதர்கள் போல காட்ட நினைத்த பதிப்பாளர் ஹமீது போன்றவர்களும் இந்தக் கதையை வாசிக்க வேண்டுமே எனத் தோன்றுகிறது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s